மூன்று பிள்ளைகளைக் கடத்திய தாய்: சமீபத்திய தகவல்
Police locate vehicle allegedly used by Toronto mother to abduct 3 children: ரொரன்றோ பெண்ணொருவர் மூன்று பிள்ளைகளைக் கடத்திய வழக்கில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ரொரன்றோவைச் சேர்ந்த சோமெர்டா (Somerda Miclescu, 22) என்னும் பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள்.

பிள்ளைகளை வளர்க்க சோமெர்டாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை சந்திக்க அனுமதியளிக்கப்பட்டிருந்தது.
அவ்வகையில், வெள்ளிக்கிழமையன்று பிள்ளைகளை சந்திக்கச் சென்ற சோமெர்டா, யாருக்கும் தெரியாமல் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு எங்கோ சென்றுவிட்டார். பொலிசாருக்கு தகவலளிக்கப்பட, பொலிசார் சோமெர்டாவைத் தேடிவந்தார்கள்.

இந்நிலையில், சோமெர்டாவின் வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
என்றாலும், சோமெர்டாவோ, அவரது பிள்ளைகளோ எங்கு என்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்வதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.