றொரன்டோ விமான நிலையக் கட்டணங்கள் உயர்வு
கனடாவின் முன்னணி சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான பியர்சன் விமான நிலையத்தின் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளன.
எதிர்வரும் ஆண்டு இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
எனவே இந்த விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகள் கட்டண அதிகரிப்பிற்கு ஆயத்தமாக வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிலைய கட்டண அதிகரிப்பானது பயணிகளின் விமான டிக்கட்டுகளில் நேரடித் தாக்கத்தை செலுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பியர்சன் விமான நிலையத்தின் கடன் கொடுப்பனவுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு இவ்வாறு இந்தப் பணம் பயன்படுத்தப்பட உள்ளது.
வெளிச் செல்லும் பயணிகளுக்கான விமான நிலையக் கட்டணம் 5 டொலர்களிலிருந்து 35 டொலர்களாக உயர்த்தப்பட உள்ளது.
விமானங்களுக்கான கட்டணங்களையும் நான்கு வீதத்தினால் உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பியர்சன் விமான நிலையத்தின் சேவைகள் குறித்து அண்மைய நாட்களில் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.