ரொறன்ரோவில் கத்தி முனையில் நாய்களை கடத்திய தம்பதியினர்
ரொறன்ரோவில் ஒரு தம்பதியினர், கத்தி முனையில் இரண்டு நாய்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
யோங்கி மற்றும் டுன்டாஸ் ஆகிய வீதிகளுகு;கு அருகாமையில் அண்மையில் இவ்வாறு இரண்டு நாய்கள் கடத்தப்பட்டுள்ளன.
நபர் ஒருவர் நாய்களை அழைத்துக் கொண்டு நடந்து சென்ற போது பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கத்தியை காண்பித்து, நாய்களை கடத்திச் சென்றுள்ளனர்.
கோல்டன் பிறவுண் நிறத்திலான ஷிஸ் த்து மற்றும் பிளக் ஸ்கொட்டிஷ் டெரியர் ஆகிய நாய்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளன.
25 வயது மதிக்கத் தக்க வெள்ளையின ஆண் ஒருவரும், 30 வயது மதிக்கத் தக்க வெள்ளையின பெண் ஒருவரும் இந்த கடத்தலுடன் தொடர்பு பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் கிடைத்தால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நாய்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் றொரன்டோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.