கனடாவில் போலீஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்
கனடாவின் டொரன்டோவில் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நோர்த் யோர்க்கின் பர்த் ட்ரஸ்ட் மற்றும் லோரன்ஸ் வீதிகளுக்கு அருகாமையில் இடம் பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபரும் காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும், இந்த சம்பவ சம்பவம் எவ்வாறு இடம் பெற்றது என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
24 மணித்தியால காலப்பகுதியில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 6 போலீஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.