கனடாவில் நேர மாற்றம்;பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவில் இன்றைய தினம் அமுலாகும் நேர மாற்றம் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பருவ மாற்றத்தின் அடிப்படையில் இன்று நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது.
சாரதிகள் மற்றும் பாதாசாரிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும் காலப் பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் கடந்த காலங்களில் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஆண்டில் ஏற்கனவே இதுவரையில் 20 பாதசாரிகள் உள்ளிட்ட 32 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக ரொறன்ரோவில் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை 2.00 மணிக்கு கடிகாரங்கள் ஒரு மணித்தியாலம் பின்நோக்கி நகர்த்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலும் நேர மாற்றம் அமுல்படுத்தப்பட்ட போது இவ்வாறு விபத்துக்கள் பதிவாகியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.