டொரோண்டோவில் டாக்ஸி சாரதியை கடத்திய ஒருவர் கைது
டொரோண்டோவில் கடந்த கோடைகாலத்தில் ஒரு ரைட்ஷேர் டாக்ஸி சாரதி ஒருவரை கடத்தி, அவரை திருடப்பட்ட ஒரு வாகனத்தை மீட்க கட்டாயப்படுத்தியதாக ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர் இன்னும் தேடப்பட்டு வருகிறார். கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 31ம் திகதி ஈஸ்ட் லிபர்ட்டி East Liberty Street மற்றும் ஹானா எவன்யூ Hanna Avenue பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவம் ரைட்ஷேர் வாகனத்தில் இருந்தபோது துப்பாக்கியை காண்பித்து, சாரதியைமிரட்டியுள்ளனர்.
வாகனத்தை ஒரு தெரியாத ஓர் இடத்திற்கு கொண்டு சென்று, அவரை திருடப்பட்ட வாகனத்தை மீட்க கட்டாயப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் திருடப்பட்ட வாகனத்தில் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
தடயங்களின் அடிப்படையில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டதாகவும் 21 வயதான ஜோர்டன் பூட்ரம் (Jordan Boodram) என்பவர் இன்னும் தேடப்பட்டு வருகிறார் ன தெரிவிக்கப்படுகின்றது.