ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவியை அகற்றிவிட்டுத் தலைமறைவான 19 வயது இளம் பெண்!
கனடாவின் டொராண்டோ நகரில் நீதிமன்ற நிபந்தனைகளை மீறி, தனது காலில் அணிந்திருந்த ஜிபிஎஸ் கண்காணிப்புக் கருவியை அகற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ள 19 வயது இளம் பெண்ணைத் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டெனிசா டுமித்ரு என்ற 19 வயது பெண், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு நீதிமன்றத்தின் மூலம் சில நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அவர் எந்நேரமும் ஜிபிஎஸ் கணக்கீட்டுக் கருவியை அணிந்திருக்க வேண்டும் மற்றும் பிணைதாரருடன் தினமும் வீட்டில் தங்க வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவாகும்.

கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி காலை 8:30 மணியளவில், அவர் தனது வீட்டில் இல்லை என்பதும், கண்காணிப்புக் கருவியை வலுக்கட்டயமாக அகற்றிவிட்டதும் காவல்துறையினருக்குத் தெரியவந்தது.
அவர் தற்போது எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் மீது பிணை உத்தரவை மீறிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5 அடி 5 அங்குல உயரம், நடுத்தர உடல்வாகு மற்றும் நீண்ட கருமை நிற முடி கொண்டவர்.
இதுகுறித்த ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனடியாகத் டொராண்டோ காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.