ரொறன்ரோ மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பான அறிவிப்பு
கனடாவின் ரொறன்ரோவில் வசிக்கும் நபர்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ரொறன்ரோவில் வசிக்கும் ஒருவர் தனது வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய வேண்டுமாயின் மணித்தியாலத்திற்கு 26 டொலர்களை உழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் அது வாழ்க்கைச் செலவை ஈடு செய்ய போதுமானதல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஒக்டோபர் மாதம் ஒன்றாரியோவில் மணித்தியால சம்பளம் 17.2 டொலர்கள் என அதிகரிக்கப்பட்டது.
இது கடந்த ஆண்டை விடவும் 3.9 வீத அதிகரிப்பாகும் எனினும் இந்த சம்பள அதிகரிப்பானது வாழ்க்கைச் செலவிற்கு ஈடு செய்யக் கூடியது அல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வாழ்வோரின் வாழ்க்கைச் செலவானது தற்போதைய மணித்தியால சம்பளத்தை ஒப்பீடு செய்யும் போது குறைவானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வாழ்க்கை படி தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் ரொறன்ரோ பெரும் பாகப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மணித்தியாலத்திற்கு 26 டொலர்கள் வருமானம் தேவைப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.