டொரோண்டோவில் இன்றும் கடும் வெப்பம் குறித்து எச்சரிக்கை
கனடாவில் இன்றைய தினமும் கடும் வெப்ப நிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினமும் கடும் வெப்பம் மற்றும் காற்று மாசுபாடு தொடரும் என கனடிய சுற்றாடல் திணைக்களமம் அறிவித்துள்ளது.
மதியம் வெப்பநிலை உணர்வாக 40°C ஆக பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வட ஒன்ராறியோ மற்றும் ப்ரேரி மாகாணங்களில் ஏற்பட்ட காட்டு தீயின் புகை இன்னும் நகரை மூடியிருப்பதால், விசேட வெப்ப எச்சரிக்கையும் காற்று தர எச்சரிக்கையும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“காற்று மாசுபாடு அதிகமாக உள்ள நேரங்களில், அனைவரும் வெளியே இருப்பதற்கான நேரத்தை குறைக்க வேண்டும். வெளியே நடைபெறும் விளையாட்டு, நிகழ்வுகளை தவிர்த்தல் அல்லது ஒத்திவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் காற்று தர கண்காணிப்பு நிறுவனம் IQAir வழங்கிய தரவின்படி, தற்போது டொரோண்டோ உலகில் 11வது மோசமான காற்று தரம் கொண்ட நகரமாக உள்ளது.