சுற்றுலா பேருந்து லொறி மீது மோதி பயங்கர விபத்து... 24 பேர் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்
ஜகாடெகாஸ் மாகாணத்தில் சுற்றுலா பேருந்து - லொறி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மெக்சிகோ நாட்டின் நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு நேற்றையதினம் (27-10-2024) சுற்றுலா பேருந்து புறப்பட்டது.
குறித்த பேருந்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.
பேருந்து ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
மேலும், இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.