சிக்கிம் நிலச்சரிவில் சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு
சிக்கிமின் லாச்சென் மற்றும் லாச்சுங் பகுதியில் நேரிட்ட மண்சரிவில் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணி சிக்கித் தவித்து வருவதாகவும், முதற்கட்டமாக அங்கு வசிக்கும் 1500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புக் குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு சிக்கிமில் உள்ள இரண்டு உயரமான மலைப் பகுதியான லாச்சென் மற்றும் லாச்சுங்கில் சுமார் 1,000 சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை முதல் மண்சரிவுகள் காரணமாக தொடர்ந்து சிக்கித் தவிப்பதாக மாவட்ட மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மண்சரிவு காரணமாக சாலையில் சிக்கித் தவித்த சுமார் 1,500 சுற்றுலாப் பயணிகள் நேற்றிரவு அருகிலுள்ள கிராமங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்கள் பொலிஸ் நிலையம், குருத்வாரா, இந்தோ - திபெத்திய எல்லை காவல் முகாம் போன்ற இடங்களில் இரவைக் கழித்த நிலையில் அவர்களுக்கு அங்குள்ள கிராமவாசிகள் உணவளித்தனர்.
நேற்றி இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட மண்சரிவுகள், சுங்தாங்கிலிருந்து லாச்சென் செல்லும் வழியில் முன்ஷிதாங்கிற்கு அருகிலும், சுங்தாங்கிலிருந்து லாச்சுங்கிற்கு செல்லும் வழியில் லிமாவிற்கு அருகிலும் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளது.
இதனால், பல்வேறு சாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பொலிஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.