கனடாவில் வாகனங்கள் கொள்ளையிடும் நூதன முறை;மக்களே எச்சரிக்கை
கனடாவில் வாகனங்களை கொள்ளையிடுவதற்கு நூதன முறையொன்று பின்பற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.
உரிமையாளர்களுக்கு தெரியாமல் வாகனங்களுக்குள் ட்ரக்கர் கருவிகளை பொருத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரக்கர்கள் மூலம் வாகனத்தின் நடமாட்டத்தை தொலைவில் இருந்து கண்காணித்து பொருத்தமான இடத்தில் வைத்து வாகனம் கொள்ளையிடும் நூதன நுட்பமொன்றை கொள்ளையர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கோர்ன்வெல் பகுதியில் 24 மணித்தியால இடைவெளியில் இவ்வாறான இரண்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எப்பிள் எயார் டெக் ட்ரக்கர்கள் (Apple AirTag tracker) வாகன உரிமையாளர்களுக்கு தெரியாமல் வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் கார் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.