Canada Day இல் இளம்பெண்ணொருவருக்கு நேர்ந்த பெரும் துயரம்
கனடாவில் இரவு நேரத்தில் சாலையில் நின்றிருந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது Canada Day-வான கடந்த 1ஆம் திகதி நடந்துள்ளது.
அன்றைய தினம் ஹலிபக்ஸில் உள்ள பாரிங்டன் சாலையில் இரவு 9 மணிக்கு இளம்பெண்ணொருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது முன்பின் அறிமுகமில்லாத நபர் ஒருவர் அங்கு வந்த நிலையில் அப்பெண் மீது தகாத முறையில் சீண்டியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் பொலிசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் 53 வயது நபர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் நிபந்தனையின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
எனினும் வன்கொடுமை குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்காக ஹாலிபக்ஸ் மாகாண நீதிமன்றத்தில் விரைவில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.