அமெரிக்காவில் 19 வயது இளைஞருக்கு நேர்ந்த பெரும் சோகம்
அமெரிக்காவில் 19 வயது இளைஞர் ஒருவர் முழு வோட்கா பாட்டிலை ஒரே மூச்சில் குடித்ததால் கோமா நிலைக்கு சென்றமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மின்னியஸோட்டா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் டேனியல் சாண்டுல்லி. இவர் கடந்த அக்டோபர் மாதம் மிசோரி பகுதியில் உள்ள கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கியுள்ளார்.
அங்கு நண்பர் நண்பர் ஒருவரின் சவாலை ஏற்று முழு வோட்கா பாட்டிலை ஒரே மூச்சில் குடித்துள்ளார். இதனால் அவரின் ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 6 மடங்கு அதிகமாகி மூளைக்கும் பரவியுள்ளது.
இதனால் மயங்கி விழுந்த அவருக்கு மாரடைப்பும் ஏற்பட, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு பின்னர் வெண்ட்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவரின் மூளை இன்னமும் முழுதாக இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றும் இப்போதும் கோமாவிலேயே இருப்பதாகவும் கூறப்படுகின்றது.