நீராடச்சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்
நவகமுவ பிரதேசத்தில் உள்ள நீர் நிரம்பிய கற்குழிற்குள் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நவகமுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்பர் தோட்டம், துன்ஹெந்தஹென, கொரதொட பிரதேசத்தில் உள்ள நீர் நிரம்பிய கற்குழிக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் அதில் தவறி வீழ்ந்து மூழ்கியுள்ளனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் செல்வதற்கு முன்னர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 14 மற்றும் 15 வயதுடைய கொர தொட, கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்களாவர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது.
அதன் காரணமாக அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் குழந்தைகளை விளையாடுவதற்கு வெளிப்புறங்களில் அனுப்புவது மற்றும் வீணாக வெளியில் அழைத்து செல்வதிலிருந்து தவிர்ந்து நடக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்துவதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது