பிராம்ப்டனில் 1.45 டொலர் மில்லியன் மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு
பிராம்ப்டனில் $1.45 மில்லியன் மதிப்புள்ள திருடப்பட்ட டிராக்டர்கள் மற்றும் டிரெய்லர்கள் மீட்கப்பட்டதை அடுத்து, இரண்டு பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 11 ஆம் திகதி டெர்ரி ரோடு ஈஸ்ட் (Derry Road East) மற்றும் பெக்கெட் டிரைவ் (Beckett Drive) அருகே உள்ள ஒரு டிரக்கிங் யார்டும், சரக்கு வாகன திருத்தும் மையத்திலும் நடந்த மோசடியைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
14 திருத்தப்பட்ட (Re-vinned) டிரெய்லர்கள், 3 திருத்தப்பட்ட சரக்கு வாகனங்கள் 1 திருடப்பட்ட டிரெய்லர், 2 திருடப்பட்ட டிரான்ஸ்போர்ட் வாகனங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு டிரெய்லர்களில் குளிரூட்டப்பட்ட அறைகளில் (Refrigerated Units) ரஸ்பெர்ரி பழங்களும் மாட்டிறைச்சியும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை மீட்டு உரிய நிறுவனங்களுக்கு போலீசார் திருப்பி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளிக்கிழமை, போலீசார் 50 வயது இந்திரஜித் சிங் வாலியா (Inderjit Singh Walia) மற்றும் 43 வயது நரீந்தர் ஷோக்கர் (Narinder Shoker) ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடந்து வருவதாகவும், மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் தொடருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.