இத்தாலியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மீது மோதிய ரயில்! 5 பேர் உயிரிழப்பு
இத்தாலியில் பரமாரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஊழியர்கள் மீது ரயில் மோதியதில் 5 ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இத்தாலி - பிராண்டிசோ நகரில் உள்ள ரயில் நிலையம் அருகே கடவையில் வழக்கமான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதில் சுமார் 10 ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழித்தடம் வழியாக வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் ஒன்று அங்கு வேலை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியது.
இச்சம்பவத்தில் 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதில் ரயில் சாரதி தவறு செய்தாரா? அல்லது தொழில்நுட்பகோளாறால் விபத்து ஏற்பட்டதா? என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.