ஜேர்மனியில் தொடருந்து - பாரவூர்தி விபத்து; ஒருவர் பலி...25 பேர் காயம்
ஜேர்மனியின் வடக்கு துறைமுக நகரமான ஹாம்பர்க்கின் ரோன்பர்க்கில் உள்ள தொடருந்துக் கடவையில் அதிவேக தொடருந்து ஒன்று பாரவூர்தி ஒன்றுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 25 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இன்ர சிற்றி எக்பிரஸ் (ICE) என்று அழைக்கப்டும் அதிவேக தொடருந்து ஹாம்பர்க்கிலிருந்து மியூனிக் செல்லும் வழியில் ரோன்பர்க்கில் உள்ள தொடருந்துக் கடவையில் தண்டவாளங்கள் ஏற்றப்பட்ட பாரவூர்தியில் மோதியது.
தொடருந்து ஓட்டுநர் அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தியபோதும் தொடருந்தை சரியான நேரத்தில் ஓட்டுநரால் நிறுத்த முடியவில்லை. தொடருந்தின் இயந்திரம் வேகமாக பாரவூர்தியில் மோதியது.
விபத்தில் தொடருந்தில் பயணித்த 55 வயதுடைய பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 25 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஒருவர் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக கூறப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்தவர்களை உலங்கு வானூர்தியில் ஏற்றப்பட்டு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்திய அடுத்து 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உட்பட அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளைத் தொடர்ந்தனர்.