சீனா எள்ளி நகையாடும் வகையில் செயற்பட வேண்டாம்
சீனா எள்ளி நகையாடக்கூடிய வகையில் கூடிய வகையில் செயல்பட வேண்டாம் என ஒன்றாறியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சீனாவிற்கு இதைவிட சிறந்த பரிசு ஒன்றை எவராலும் வழங்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகரீதியில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையானது உலக நாடுகள் எள்ளி நகையாடக்கூடிய வகையில் அமையப்பெற்றுள்ளது என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக பேரவையில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் கனடாவுக்கும் இடையில் தற்பொழுது நிலவி வரும் முரண்பாட்டு நிலைமைகளை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஏற்றுமதி பொருட்கள் கனடாவின் ஏற்றுமதி பொருட்கள் மீது 25 வீத வரி அறவீடு செய்யப்பட வேண்டும் என அண்மையில் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
மேலும், உருக்கு மற்றும் அலுமினிய ஏற்றுமதிகளுக்கு 25 வீத வரி விதிப்பதாக அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் பெரும் விரிசல் நிலை உருவாகியுள்ளது.
அமெரிக்காவும் கனடாவும் நீண்ட கால நண்பர்கள் எனவும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏற்படக்கூடிய மெய்யான ஆபத்துக்களை கவனித்து வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
தேவையற்ற வகையில் வர்த்தக ரீதியிலான முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது எவருக்கும் நன்மையை உண்டு பண்ணாது என அவர் தெரிவித்துள்ளார்.