அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்: பயணிகளுக்கு நேர்ந்த நிலை?
அமெரிக்கா - நியூயார்க் மாகாணம் மேன்ஹாட்டன் நகர ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (04-01-2023) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
300 பயணிகளுடன் புறநகர் ரயிலும், பயணிகள் இன்றி பணிமனைக்கு சென்றுகொண்டிருந்த ரயிலும் 96வது தெரு ரயில் நிலையத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ரயிலின் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன.
இந்த விபத்தில் ரயில் பயணிகள் 20 பேர் காயமடைந்தனர். ரயில்கள் மெதுவான வேகத்தில் பயணித்ததால் விபத்தால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. இதையடுத்து காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ரயில் விபத்தால் மேன்ஹாட்டன் நகரில் சில மணித்தியாலம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
பின்னர், விபத்துக்குள்ளான ரயில்கள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டதையடுத்து ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியது.