ஜேர்மனியினில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான ரயில்கள்
ஜேர்மனில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனின் மத்திய மாகாணமான பவேரியாவில் உள்ள ,முனிச் நகரில் இருந்து பயணிகள் ரயில் சென்றுள்ளது. குறித்த ரயிலில் சுமார் 100 பயணிகள் இருந்துள்ளனர். Ebenhausen-Schlobatlarn ரயில் நிலையங்களுக்கு இடையே பயணித்த போது, அதே தண்டவாளத்தில் வேறு திசையில் மற்றொரு பயணிகள் ரயில் வந்தது. அப்போது 2 ரயில்கள் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 40 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்தனர்.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும், விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.