பாப்பாண்டவரின் விஜயத்தில் ஏற்பட்ட குழப்பம்!
புனித பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிஸின் கனேடிய விஜயத்தின் போது மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறினால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
வதிவிடப் பாடசாலைகளில் கற்று உயிருடன் இருக்கும் பழங்குடியினத்தவர்களிடம், பாப்பாண்டவர் மன்னிப்பு கோரிய விவகாரத்தில் இவ்வாறு குழப்ப நிலைமை உருவாகியுள்ளது.
எட்மோன்டனுக்கு விஜயம் செய்திருந்த வேளையில் சில கேள்விகள் பாப்பாண்டவரிடம் எழுப்பப்பட்டது.
கடந்தகாலத்தை விட்டு நகர வேண்டுமாயின் மன்னித்தல் மிகவும் இன்றியமையாது எனவும், இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் கடுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பாப்பாண்டவர் கூறியிருந்தார்.
பாப்பாண்டவர் ஸ்பெய்ன் மொழியில் ஆற்றிய உரை, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
எனினும், கடுமையான விசாரணைகள் என்பது கடுமையான தேடல் என மொழிபெயர்க்கப்பட்டிருக்க வேண்டுமென பின்னர் பாப்பாண்டர் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பாப்பாண்டவர் தனது தாய்மொழியில் கூறிய கருத்துக்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட போது ஏற்பட்ட தவறு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் பாப்பாண்டவரின் தரப்பினர் மொழிபெயர்ப்பு பிழை என்பதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர்.