கனடாவில் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் திருட்டு
கனடாவில் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் களவாடப்பட்டுள்ளது.
கனடாவின் போக்குவரத்து நிறுவனங்கள் இரண்டிலிருந்து சுமார் ஒரு மில்லியன் டாலர் பெறுமதியான ஒலிவ் எண்ணெய் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொன்றியல் போலீசார் இந்த சம்பவம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
க்யூ டிரான்ஸ் என்ற போக்குவரத்து நிறுவனம் வாடிக்கையாளர் ஒருவருக்கு ஒலிவ் எண்ணெய் விநியோகம் செய்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த வாடிக்கையாளருக்கு ஒலிவ் எண்ணெய் விநியோகம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதே போன்று மற்றுமொரு போக்குவரத்து நிறுவனமும் ஒலிவ் எண்ணெய் விநியோகம் செய்வதாக உறுதி அளித்த போதிலும் ஒலிவ் எண்ணெய் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒலிவ் எண்ணெய் வகைகள் களவாடப்பட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.