ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி; டிரம்பை கண்டுகொள்ளாத கமலாஹாரிஸ்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவி வகித்த ஐவர் ஒன்றாக கூடியிருந்த தருணத்தில் கமலா ஹரிஸும் , ஜோர்ஜ் புஷ்ஷும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பை புறக்கணித்தனர்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கடந்த மாதம் தனது 100வது வயதில் காலமானார்.
ஜிம்மி கார்ட்டரின் வாழ்க்கையை கௌரவிக்கும் நிகழ்வுகள்
இந்நிலையில் வொஷிங்டனின் தேசிய கதீட்ரலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் தனது கணவருடன் டொனால்ட் டிரம்புக்கு முன்வரிசையில் காணப்பட்ட ஆசனத்தில் அமர்ந்திருந்தார்.
அங்கு பராக் ஒபாமாவுடன் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப் கமல ஹரிஸை பார்த்தவுடன் மௌனமானார்.
இதேவேளை தொலைக்காட்சி கமராக்கள் தன்னை நோக்கி திரும்பியதால் அசௌகரியமடைந்தவராக காணப்பட்ட கமலா ஹரிஸ் கதீட்ரலின் முன்பக்கத்தை பார்வையிட்டவாறு அமர்ந்திருந்தார்.
கடந்த நவம்பர் 5ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர், டிரம்ப், ஹமலா ஹாரிஸ் இருவரும் பொது நிகழ்வில் ஒன்றாக கலந்துகொண்டமை இதுவே முதல் தடவை ஆகும்.
ஐந்து ஜனாதிபதிகள் ஒன்றாக கலந்துகொண்ட நிகழ்வு
அதேசமயம் முன்னாள் துணை ஜனாதிபதி மைக் பென்சின் மனைவி கரென் பென்சும் டொனால்ட் டிரம்பை அலட்சியம் செய்தார்.
தனது கணவருடன் டிரம்ப் கைகுலுக்கியவேளை அவர் ஆசனத்திலேயே அமர்ந்திருந்தார். 2021இல் ஜோபைடனின் வெற்றியை அங்கீகரிப்பதை மைக்பென்ஸ் தடுக்க முயன்றதை தொடர்ந்து டிரம்புக்கும் அவருக்கும் இடையிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் வாழ்க்கையை கௌரவிக்கும் நிகழ்வுகள் ஒரு வாரத்துக்கு மேல் நடந்துவரும் நிலையிலேயே நேற்றைய நிகழ்வு நடைபெற்றது.
அதேவேளை 2018இல் ஜோர்ஜ் புஷ்ஷின் இறுதி நிகழ்வின் பின்னர் ஐந்து ஜனாதிபதிகளும் ஒன்றாக நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளமையும் இதுவே முதல் தடவை ஆகும்.