சார்லஸ் - கமிலா திருமணத்தின் போது ஏற்பட்ட சங்கடங்கள்; காலம் கடந்து வெளியான தகவல்கள்
சார்லஸ் - கமிலா தம்பதி திருமணம் செய்து கொண்ட போது போடப்பட்டிருந்த ஒரு தடை உத்தரவு தொடர்பான சுவாரசிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மன்னர் சார்லஸ் - ராணி கமிலா ஆகிய இருவருக்கும் 2005ல் திருமணம் நடைபெற்றது. இருவருக்குமே அது இரண்டாவது திருமணம் தான். ஏனெனில் சார்லஸ் டயானாவையும், கமிலா ஆண்ட்ரூ பார்க்கர் என்பவரையும் முதல் திருமணம் செய்த நிலையில் அவர்கள் பிரிந்தனர்.
சார்லஸ் - கமிலா திருமணத்தின் போது சங்கடங்கள் ஏற்படுத்துவதை தடுக்க சில விதிமுறைகள் போடப்பட்டு பின்பற்றப்பட்டன. அதில் ஒன்று தான் திருமணத்தில் தம்பதிக்கு கொடுக்கப்படும் பரிசுகளை தடை செய்தது.
Mirror பத்திரிக்கையின் கூற்றுப்படி, அழைப்பிதழில், Wedding List என்பது இருக்காது, இதற்கு காரணம், 1981 இல் சார்லஸ் டயானாவை மணந்தபோது, அந்தத் தம்பதியினர் பொதுமக்களிடமிருந்து சுமார் 6000 பரிசுகளை பெற்றனர்.
இந்த பரிசுகளில் பல வினோதமான மற்றும் தேவையற்ற பொருட்கள் இருந்தது. அவை எரிக்கப்படவோ அல்லது அரச ஊழியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்ற சூழலோ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
எனவே சார்லஸ் இந்த சூழ்நிலையை இரண்டாவது முறையாக சந்தித்து அதை எதிர்கொள்ள விரும்பவில்லை என கூறப்பட்டிருந்தது.
இதனால் அரச குடும்பத்திற்குள் வந்த கமிலா, தனது திருமணத்தில் பரிசுகளை வாங்க முடியாமல் போனது, இதற்கு மறைமுக காரணமாக டயானா தான் இருந்திருக்கிறார்.
அரச குடும்ப திருமண நெறிமுறையில் பொதுவான மற்றொரு விதி, மொபைல் போன்கள் மற்றும் கேமராக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.