கனடாவில் எதிர்வரும் 19ம் திகதி சமஷ்டி விடுமுறை?
எதிர்வரும் 19ம் திகதி திங்கட்கிழமை சமஷ்டி பொதுவிடுமுறை என பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
காலஞ்சென்ற பிரித்தானிய மகாராணியின் இறுதி கிரியைகளை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ம் திகதி தேசிய துக்கதினமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் அமைச்சர் சிமொஸ் ஓ றேகன் (Seamus O’Regan ) இது குறித்து அறிவித்துள்ளார்.
சமஷ்டி அரசாங்கப் பணியாளர்களுக்கு பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மாகாண அரசாங்க பணியாளர்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு விடுமுறையா இல்லையா என்பது குறித்த குழப்ப நிலை உருவாகியுள்ளது.
மத்திய அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் வங்கிகள், விமான சேவை நிறுவனங்கள், அஞ்சல் அலுவலகம் போன்றனவற்றுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, சில மாகாணங்களில் பொதுவிடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கியூபெக், ஒன்றாரியோ போன்ற மாகாணங்களில் பொதுவிடுமுறை கிடையாது.
எனினும், பிரிட்டிஷ் கொலம்பியா, நியூபவுன்ட்லாண்ட், நோவோ ஸ்கோட்டியா போன்ற சில பகுதிகளில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.