காட்டுத் தீயில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு பிரதமர் இரங்கல்
கல்கரி ஜஸ்பர் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்த தீயணைப்புப் படை வீரரது குடும்பத்திற்கு கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல் வெளியிட்டுள்ளார்.
ஜஸ்பர் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடி உயிரை தியாகம் செய்த படைவீரர் குறித்த செய்தி மனதை நெகிழச் செய்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விபத்து தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அல்பேட்டா மக்களுக்காக மிகுந்த மன தைரியத்துடன் போராடிய ஒருவரை இழந்து விட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்புப் படைவீரருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் தீயணைப்புப் படைவீரர்கள் பாதையின் இரு மருங்கிலும் நின்று தங்களது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.
தீயணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது மரம் முறிந்து வீழ்ந்து குறித்த நபர் உயிரிழந்தார்.