கனடா பிரதமரை மோசமான வார்த்தைகளால் விமர்சித்த பொதுமக்கள்: அதை தொடர்ந்து எடுக்கப்பட்ட முடிவு
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்ராறியோவில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்ற இருந்த நிலையில், அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
நேற்று மாலை, ஒன்ராறியோவிலுள்ள Bolton என்ற இடத்தில், ட்ரூடோ தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றுவதாக இருந்தது. ஆனால், அவரது ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள் அங்கு அதிக அளவில் கூடினார்கள். அத்துடன், கடுங்கோபத்திலிருந்த அவர்கள் ஆபாசமான வார்த்தைகளால் ட்ரூடோவை விமர்சித்தார்கள். ஆபாச வார்த்தைகள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தார்கள்.
இரண்டரை மணி நேரமாகியும் அவர்கள் கலைந்து செல்வதற்கான அறிகுறி எதுவும் தென்படாததால், ட்ரூடோ கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அவரது ஆதரவாளர்களில் ஒருவர் அறிவித்தார். அப்போதும் எதிர்ப்பாளர்கள் பலத்த குரல் எழுப்பினார்கள்.
பாதுகாப்பு கருதி ட்ரூடோவின் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையிலும், பொலிசார் வந்து ட்ரூடோ கூட்டத்துக்காக கூடியிருந்தவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்ல நேரிட்டது.
We're @JustinTrudeau 's next stop. Media getting called fake news, etc. #cdnpoli #elxn44 pic.twitter.com/JytUf0hidm
— Raffy Boudjikanian (@CBCRaffy) August 27, 2021
Canada is a country where people can express their political views, but we must do so peacefully and orderly. No one deserves to be subjected to harassment and obscenities. https://t.co/sMkpGC60J5
— Erin O'Toole (@erinotoole) August 28, 2021
Everyone deserves to be safe on the campaign trail. I am very sorry to hear this happened tonight to Mr. Trudeau and the Liberal team and I hope that everyone is ok. https://t.co/rqXVAJiVsg
— Jagmeet Singh (@theJagmeetSingh) August 27, 2021