ட்ரம்பின் கொள்கைளால் மீண்டும் ஆட்சிக்கு வரும் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு மிரட்டலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றலாம் என்ற சூழல் தற்போது கனடாவில் உருவாகியுள்ளது.
கனடாவின் லிபரல் கட்சி, நான்கு ஆண்டுகளில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சியை பின் தள்ளி, பிரமிக்க வைக்கும் வகையில் மீண்டும் வந்துள்ளது.
ட்ரம்பின் நிலைப்பாடு
சமீபத்திய Ipsos ஆய்வுகளின் அடிப்படையில், லிபரல் கட்சி தற்போது கன்சர்வேடிவ் கட்சியை விட 2 சதவிகிதம் முன்னிலை பெற்றுள்ளனர். ஆறு வாரங்களுக்கு முன்பு அவர்கள் 26 சதவிகிதம் பின்னடைவை எதிர்கொண்டு குறித்த மாற்றத்தை சாதித்துள்ளனர்.
லிபரல் கட்சியின் இந்த திருப்பத்திற்கு காரணம் கனடாவில் பரவி வரும் ட்ரம்ப்-எதிர்ப்பு உணர்வுகளே என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
வர்த்தகம் மற்றும் பிராந்திய விரிவாக்கம் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உக்கிரமான நிலைப்பாடு கனேடிய மக்களின் தேசபக்திக்கு ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது. ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிராக கனேடியர்கள் தங்கள் அரசாங்கத்தின் பின்னால் அணிதிரண்டுள்ளனர்.