கனடிய பிரதமருக்கும் முதல்வர்களுக்கும் இடையில் சந்திப்பு
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு தொடர்பில் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கனடா மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுமார் 25 வீத வரி அளவீடு செய்யப்படும் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வாறு பெருந்தொகை வரி அறவீடு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என மாகாண முதல்வர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
குறிப்பாக ஒன்றாரியோ போன்ற மாகாணங்களில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவு ஏற்றுமதிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
டிரம்பின் வரி அறவீட் கொள்கை கனடாவை பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் மாகாண முதல்வர்கள் பிரதமருடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.