கனடா பிரதமர் ட்ரூடோவின் மனைவி குறித்து வெளியாகிவரும் அதிரவைக்கும் தகவல்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைத் தெரியாதவர்கள் குறைவு என்றே கூறலாம். அவரது எளிமையும், கவர்ச்சியும் உலகம் அறிந்தது. ஒருமுறை அரசுமுறைப்பயணமாக இந்தியா சென்றிருந்த ட்ரூடோ அங்கு ஆடிப்பாடி மகிழ்ந்த காட்சிகள் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம்.
ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவையும், ஏன், அவரது தந்தையையும் அறிந்த அளவுக்குக்கூட, பலருக்கும் அவரது மனைவியைத் தெரியாது.
ஆனால், சமீப காலமாக ட்ரூடோவின் மனைவியைக் குறித்த பரபரப்பு தகவல் ஒன்று ஊடகங்களில் வெளியாகிவருகிறது.
ஜஸ்டின் ட்ரூடோவும், சோபி ட்ரூடோவும் (Sophie Grégoire Trudeau), 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து, 18 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்துவந்தார்கள். தம்பதியருக்கு , Xavier (15), Ella-Grace (14), மற்றும் Hadrien (9) என்னும் மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகத்து மாதம், தானும் தன் மனைவி சோபியும் பிரிவதாக அறிவித்தார் ட்ரூடோ.
விடயம் என்னவென்றால், ட்ரூடோவை முறைப்படி பிரிவதற்கு முன்பே, வேறொரு நபருடன் சோபி இணைந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.
அதாவது, ’விவாகரத்துக்கு முன்பே, வேறொரு நபருடன் இணைந்த சோபி’ என்ற தலைப்பில் செய்திகள் வெளியாகி அதிரவைத்துள்ளன.
அந்த வேறொரு நபரின் மனைவி, தனது விவாகரத்து விண்ணப்பத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதால், அந்த விடயம் வெளியில் தெரியவந்துள்ளது.
சோபி வாழ்வில் வந்துள்ள அந்த நபர் ஒரு குழந்தைகள் நல மருத்துவர் ஆவார். அர்ஜெண்டினா பின்னணி கொண்ட அவரது பெயர், Dr. மார்க்கோஸ் (Dr. Marcos Bettolli) என்பதாகும். அவர் , Ottawaவில் வாழ்ந்துவருகிறார்.
ட்ரூடோவும், சோபியும், 2023ஆம் ஆண்டு, ஆகத்து மாதம்தான் பிரிவதாக அறிவித்தார்கள். ஆனால், அதற்கு முன்பே, அதாவது, 2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் Dr. மார்க்கோஸின் மனைவியாகிய அனா (Ana Remonda) விவாகரத்து கோரி விண்ணப்பிக்கும்போது, தனது கணவரான Dr. மார்க்கோஸ், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கும், பிரபலமான ஒரு பெண்ணுடன் இணைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அதாவது, ட்ரூடோவும், சோபியும் பிரிவதற்கு பல மாதங்கள் முன்பே சோபிக்கும் Dr. மார்க்கோஸுக்கும் தொடர்பு ஏற்பட்டது, தற்போது அனாவின் விவாகரத்து விண்ணப்பத்திலிருந்து தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.