டிரம்ப் திடீர் மாற்றம்; இந்தியா, சீனா மீதான 100 சதவீத வரி நிறுத்தி வைப்பு!
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 100 சதவீத வரியை விதிக்கும் மசோதா சமீபத்தில் அமெரிக்கா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இன்னிலையில் இன்று முதல் 100 சதவீத வரி அமுலுக்கு வந்த நிலையில் வரியை நிறுத்தி வைத்திருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.

வரியை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவிப்பு
ஏனெனில், ரஷ்யாவிடமிருந்து இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விரும்பவில்லை. எனவே, வரிகளை உயர்த்தி மிரட்டி வந்தார்.
ஆனால், இந்திய தரப்பிலிருந்து எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை. இன்று முதல் 100 சதவீத வரி அமுலுக்கு வந்த நிலையில் வரியை நிறுத்தி வைத்திருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
மேலும், ரஷ்யா மீது விதித்திருந்த தடைகளை நீக்கி கச்சா எண்ணெய் மீதான வரிகளை தள்ளுபடி செய்வதாகவும் டிரம்ப் அறிவித்திருக்கிறார்.
ஈரான் போர் காரணமாக அமெரிக்காவிடமே தற்போது கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகின்றது.