கனடா மீது மீண்டும் 35 சதவிகித வரி விதிக்க இருக்கும் அமெரிக்கா
ட்ரம்ப் மீண்டும் கனேடிய பொருட்கள் மீது 35 சதவிகித வரிகள் விதிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
வரி விதிப்பு தொடர்பில் கனேடிய பிரதமரான மார்க் கார்னிக்கு ட்ரம்ப் எழுதியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, எனத் துவங்கும் அந்தக் கடிதத்தில், உங்கள் நாட்டிலிருந்து எங்கள் நாட்டுக்குள் நுழையும் போதைப்பொருட்களை தடுக்க கனடா தவறிவிட்டது.
அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பதிலாக, பழிவாங்கும் வகையில் வரி விதித்துள்ளது கனடா.
ஆக, ஆகத்து மாதம் 1ஆம் திகதி முதல், அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் கனேடிய பொருட்களுக்கு 35 சதவிகித வரி விதிக்க இருக்கிறோம்.
நீங்கள் மீண்டும் வரியை அதிகரித்தால், இந்த 35 சதவிகித வரியுடன், நீங்கள் எவ்வளவு வரி விதிப்பீர்களோ அதே வரியை நாங்களும் கூடுதலாக விதிப்போம் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக, அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு எனத் துவங்கி, வரி விதிப்பு குறித்து மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது ட்ரம்பின் கடிதம்.
ஆகத்து மாதம் 1ஆம் திகதி முதல், கனேடிய பொருட்கள் மீது 35 சதவிகித வரிகள் கூடுதலாக விதிக்கப்பட உள்ளன என்பதுதான் கடிதத்தின் சாராம்சம்!