அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது ; டிரம்ப் குற்றச்சாட்டு
ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ராணுவ அகாடமியல் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் பேசியதாவது,
உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தின் அதிகாரிகளாக நீங்கள் உள்ளீர்கள். ஏனென்றால் நான் அந்த ராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்பினேன்.
நாங்கள் கவனச்சிதறல்களில் இருந்து விடுபட்டு, அமெரிக் காவின் எதிரிகளை நசுக்கு வது, மற்றும் நமது சிறந்த அமெரிக்கக் கொடியை பாதுகாப்பது போன்ற அதன் முக்கிய பணியில் நமது ராணுவத்தை கவனம் செலுத்த வைக்கிறோம்.
ராணுவம் தனது தொலை நோக்கு எதிரிகளைத் தோற் கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதி லும் கவனம் செலுத்துகிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் தங்களது சொந்த ஹைப்பர் சோனிக் ஏவுகணையை வடி வமைக்கும் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாம் அவற்றை உருவாக்குகிறோம்.
ஆனால் இதற்கு முன்பு ஒபாமா ஆட்சி நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடியது. அதை ரஷியர்கள் திருடினர்.
அப்போது மோசமான விஷயம் நடந்தது. ஆனால் தற்போது நாங்கள் அவற்றை நிறைய (ஏவு கணை) உருவாக்குகிறோம். அமெரிக்க ஆயுதப் படை களின் வேலை வெளிநாட்டு கலாச்சாரங்களை மாற்று வது அல்ல. அதன் முக்கிய பணி தேசிய பாதுகாப்பு ஆகும்" இவ்வாறு அவர் பேசினார்.