2 மணி நேரம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் - புட்டின்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும், ரஷ்ய ஜனாதிபதி புடினும் உக்ரைன் போர் நிறுத்தம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக நேற்று இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரஷ்யா - உக்ரைன் இடையே, கடந்த 2022 பெப்ரவரியில் இருந்து போர் நீடிக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு பலமுறை அழுத்தம் தந்த போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், நேற்று ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ட்ரம்ப் இரண்டு மணிநேரம் பேச்சு நடத்தினார்.
இது தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறுகையில், “உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாராக உள்ளது. அமைதி தீர்வுக்கு ஆதரவாக உள்ளேன்.
“இரு தரப்புக்கும் ஏற்புடைய சமரசங்களை கொண்டுவர வேண்டும். இதுகுறித்த ட்ரம்புடனான பேச்சு நேர்மையானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது,” எனத் தெரிவித்துள்ளார்.