டிரம்பின் வாகன வரிகள் நாட்டின் மீதான நேரடி தாக்குதல்; கனடா பிரதமர் கார்னி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வாகன வரிகள் அவரது நாட்டின் மீதான நேரடி தாக்குதல் என்றும், வர்த்தகப் போர் அமெரிக்கர்களைப் பாதிக்கிறது என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி கூறினார்.
அமெரிக்க நுகர்வோர் நம்பிக்கை பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். அடுத்த மாதம் முதல் ஆட்டோ இறக்குமதிகள் மீது 25% வரிகளை விதிப்பதாகக் டிரம்ப் அறிவித்துள்ளார்.
எங்கள் நிறுவனங்களைப் பாதுகாப்போம்
இந்நிலையில் இது மிகவும் நேரடியான தாக்குதல் என தெரிவித்துள்ளகனடா பிரதமர் மார்க் கார்னி,
நாங்கள் எங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்போம். எங்கள் நிறுவனங்களைப் பாதுகாப்போம். எங்கள் நாட்டைப் பாதுகாப்போம் பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் டிரம்பின் நிர்வாக உத்தரவின் விவரங்களைப் பார்க்க வேண்டும் என்றும் கார்னி கூறினார்.
இது நியாயமற்றது என குறிப்பிட்ட அவர், தேர்தல் பிரச்சாரத்தை விட்டு வெளியேறி அமெரிக்க உறவுகள் குறித்த தனது சிறப்பு அமைச்சரவைக் குழுவிற்குத் தலைமை தாங்க ஒட்டாவா செல்வதாகவும் கூறினார்.
டிரம்பின் வரிகளால் பாதிக்கப்பட்ட கனேடிய ஆட்டோ வேலைகளைப் பாதுகாக்கும் CA$2 பில்லியன் ($1.4 பில்லியன்) மூலோபாய மறுமொழி நிதியை கார்னி முன்னதாக அறிவித்தார்.
அதேவேளை கனடாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதிப் பொருள் ஆட்டோக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.