கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ட்ரம்ப் ; மரண தண்டனை விவகாரத்தில் திருப்பம்

Donald Trump United States of America Death Penalty
By Vironika Oct 16, 2026 07:41 AM GMT
Report

2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட் ஹூட் (Fort Hood) இராணுவத் தளத்தில் 13 இராணுவ வீரர்களைச் சுட்டுக்கொன்ற முன்னாள் அமெரிக்க இராணுவ மேஜரும் மனநல மருத்துவருமான நிடால் ஹாசனுக்கு (Nidal Hasan) வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைப் பொதுமக்கள் பார்க்கும் வகையில் நேரலையில் (Livestream) ஒளிபரப்ப அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சு (Pentagon) தீர்மானித்திருந்தது.

இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது முடிவில் இருந்து ட்ரம்ப் அரசு பின்வாங்கியுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு மரண தண்டனையும் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது நிடால் ஹாசனுக்கு மரண தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு பிறகு (1945) அமெரிக்க இராணுவத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள முதல் சம்பவமாகவும் இது பதிவாகவுள்ளது.

இத்தகைய கடுமையான குற்றங்களுக்குத் தக்க பலன் உண்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை நேரலையில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாகப் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால் மரண தண்டனையை நேரில் ஒளிபரப்புவது மனிதாபிமானமற்ற செயல் என அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் இயங்கி வரும் மனித உரிமை அமைப்புகள், செயல்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ட்ரம்ப் ; மரண தண்டனை விவகாரத்தில் திருப்பம் | Trump Backs Down Amid Outcry Over Death Penalty

ஐநா மனித உரிமைகள் அமைப்பும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேநேரம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் இருந்தும் டிரம்ப்பின் குடியரசு கட்சியில் இருந்துமே எதிர்ப்பு கிளம்பியது.

குடியரசுக் கட்சி செனட்டர் தாம் டில்லிஸ் இதை வெறுக்கத்தக்கதுக்கும் அப்பாற்பட்டது என்று கூறி, பொது மரணதண்டனைகள் அமெரிக்காவுடன் தொடர்புடையவை அல்ல, மாறாக அடக்குமுறை ஆட்சிகளுடன் தொடர்புடையவை என்று விமர்சித்தார்.

ஓய்வுபெற்ற எழுபத்திரண்டு இராணுவ அதிகாரிகளும், அந்த நேரலை ராணுவம் மற்றும் நாட்டின் கௌரவத்தை களங்கப்படுத்தும் என்று கூறி, அதனை நிறுத்துமாறு ட்ரம்ப்பிடம் வலியுறுத்தினர்.

இந்நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் தனது முடிவில் இருந்து ட்ரம்ப் அரசு பின்வாங்கியுள்ளது. மாறாக, பாதிக்கப்பட்டவர்களின் நெருங்கிய குடும்பத்தினர் விரும்பினால், மரண தண்டனையை நேரில் காணலாம் என்று தெரிவித்துள்ளார்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US