24 நாடுகளின் விமானிகள் மற்றும் பணிப்பெண்களுக்கு இஸ்ரேல் பிறப்பித்த அதிரடி தடை
இஸ்ரேலுடன் தூதரக உறவு இல்லாத பாகிஸ்தான், ஈரான், ஓமன், சவுதி அரேபியா உள்ளிட்ட 24 நாடுகளின் விமானிகள் மற்றும் பணிப்பெண்கள் இஸ்ரேல் வான் எல்லைக்குள் நுழைய அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால், சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளன.

கடந்த மாதம் துபாயில் இருந்து இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானத்தை இஸ்ரேல் விமான நிலையத்தின் மீது மோதச் செய்ய ஓமன் நாட்டு துணை விமானி முயன்றார்.
அப்போது இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் போராடி அந்த சதியை முறியடித்தார்.
இவ்வாறு சர்வதேச வான்வெளியில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அரங்கேறும் கடத்தல் சம்பவங்களை தவிர்ப்பதற்காகவே .
இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.