கனடிய அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா அரசியலில் தலையிடும் வகையில் புதிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா – கனடா வர்த்தக உறவுகளில் மிகப்பெரிய 25% இறக்குமதி வரியை விதிப்பதற்கான இறுதி திகதி மீண்டும் நெருங்கி வரும் நிலையில், கனடாவின் முன்னாள் நிதியமைச்சர் க்ரிஸ்டியா ஃப்ரீலாண்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"க்ரிஸ்டியா ஃப்ரீலாண்டு மிக மோசமானவர், என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், கனடாவின் லிபரல் கட்சியின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் க்ரிஸ்டியா ஃப்ரீலாண்டை "மிக மோசமானவர்" (terrible) என டிரம்ப் திட்டியுள்ளார்.
மேலும், க்ரிஸ்டியா நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது தமது செயற்பாடுகளினாலேயே என தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் தொடர்பிலும் ட்ரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற டிரம்பின் உத்தரவால் 25% வரியை அமல்படுத்துவது மார்ச் 4 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எரிசக்தி இறக்குமதிக்கு 10% வரி விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத குடியேறிகள் உள்ளிட்ட விவகாரங்களில் கனடாவும் மெக்சிகோவும் எதுவும் செய்யவில்லை என டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.