ஹவார்ட் பல்கலைகழகத்தை வேடிக்கை என வர்ணித்த டிரம்ப்
அமெரிக்காவின் பிரபலமான ஹவார்ட் பல்கலைகழகத்தை ஒரு வேடிக்கை என வர்ணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதற்கான நிதிகளை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஹவார்ட் நிர்வாகம் வெளியாட்கள் தன்னை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கவேண்டும் என டிரம்ப் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ள நிலையிலேயே , டிரம்ப் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
ஹவார்ட்டை இனிமேல் கற்றலிற்கான சிறந்த இடமாக கருதமுடியாது என குறிப்பிட்டுள்ள டொனால்;ட் டிரம்ப் உலகின் சிறந்த பல்கலைகழகங்களின் பட்டியலில் இடம்பெற தகுதியானதாக கருதக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஹவார்ட் என்பது ஒரு நகைச்சுவை ஹவார்ட் வெறுப்புணர்வையும் முட்டாள்தனத்தையும் போதிக்கின்றது என தெரிவித்த டிரம்ப், அதற்கு இனிமேலும் அரசாங்கத்தின் உதவிகளை வழங்ககூடாது எனவும் தெரிவித்துள்ளார்.