புலியை துரத்தி சென்று சாய்த்த ட்ரம்ப் ; வைரலாகும் வீடியோவால் சர்ச்சை
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புலியை துரத்தி சென்று அதனை தரையில் சாய்க்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதனை அவர் தன்னுடைய ட்ரூத் என்ற சமூக ஊடகத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோவுக்கு முன் அவர் மற்றொரு வீடியோவை வெளியிட்டார். அதில், வாலிபர் ஒருவரை புலி தாக்கும் காட்சிகள் இருந்தன.

உண்மையில், நடந்தது என்னவென்றால், இங்கிலாந்தின் டான்காஸ்டர் பகுதியில், யார்க்சைர் வனவிலங்கு பூங்கா உள்ளது. அதில், புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் நபர் ஒருவர் குதித்து உள்ளார்.
அவரை புலி கடித்து, தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அந்த வீடியோவில், இயற்கையோடு மோத வேண்டாம் என்று பதிவிட்டு உள்ளார். இந்த நிலையில், புலியுடன் விளையாடுவது போன்ற ஏ.ஐ. வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில், நபர் புலியின் தாக்குதலை எதிர்கொள்ள பயத்துடன் செய்த செய்கைகளை, பிரதிபலிக்கும் வகையில், டிரம்ப் செய்வது போன்ற காட்சிகள் இருந்தன. புலி தாக்கும்போது, அதனை எச்சரிக்கும் வகையில் அந்நபர் கையை நீட்டி சத்தம் போட்டு பேசும் காட்சிகள் இருந்தன.
அதேபோன்று, ட்ரம்ப் செய்தது சர்ச்சையாகி உள்ளது. அந்த நபரின் மரணத்தில் குடும்பத்தினர் துயரில் இருக்கும்போது, இதுபோன்ற வீடியோவை வெளியிட்டதற்காக இதற்கு சிலர் கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.
Trump actually posted this AI video of him with a tiger in the middle of the night. This man is demented and mentally unwell. https://t.co/LdVgdCw5xh
— Harry Sisson (@harryjsisson) October 14, 2026