வெளிநாட்டவர்களுக்கு கடைசி வாய்ப்பு கொடுத்த டிரம்ப்
அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை உள்துறை பாதுகாப்பு அரச அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டுமென அந் நாட்டின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
அவ்வாறு பதிவு செய்யப்படவில்லையாயின் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சகம்
இது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உடனடியாக தங்களை பற்றிய விவரங்களை உள்துறை பாதுகாப்பு அரச அலுவலங்களில் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்படவில்லையாயின் அவர்கள் மீது அபராதம், சிறை தண்டனை உள்ளிட்ட நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும். அவ்வாறு தங்கியிருப்பவர்கள் தாமாக வெளியேறினால் பாதுகாப்பானது.
நீங்கள் விரும்பும் விமானத்தில் பயணம் செய்ய சலுகை கிடைக்கும். நீங்களாகவே வெளியேறும் பட்சத்தில் அமெரிக்காவில் சம்பாதித்த பணத்தை நீங்களே வைத்துக்கொள்ள முடியும். நாங்களாகவே வெளியேற்றாமல் நீங்களே வெளியேறினால் எதிர்காலத்தில் சட்டப்படி அமெரிக்காவுக்கு வர முடியும்.
இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு வர நிரந்தரமாக தடை விதிக்கப்படும். இந்த முடிவு அமெரிக்காவில் எச்.1-பி மாணவர் விசா பெற்றவர்களை நேரடியாக பாதிக்காது.
எச்-1 பி. விசாவில் உள்ள ஒருவர் வேலையை இழந்திருந்தால் அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.