இறக்குமதிக்கு கண்டபடி வரி விதித்த ட்ரம்ப் ; முட்டைக்காக கையேந்தும் அமெரிக்கா
அமெரிக்க அதிபராக பதவியேற்ற நாள் முதல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கண்டபடி வரி விதிக்கும் நிலையில் மற்ற நாடுகள் எல்லாம் அமெரிக்காவிடம் பாரபட்சமாக நடப்பதாக கூறி வரியை கடுமையாக்கியுள்ளன. இந்த சூழலில் பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட பற்றாக்குறையை சமாளிக்க ஐரோப்பிய நாடுகளிடம் முட்டைக்காக கையேந்தும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருக்கிறது.
எங்கள் நாட்டின் பொருட்களுக்கு எந்த நாடுகள் எல்லாம் அதிக வரி விதிக்கின்றனவோ அந்த நாடுகளுக்கு எல்லாம் கடுமையான வரி விதிப்பேன் என்று அறிவித்தார். அதன்படியே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகளவில் வரிகளை விதித்து அதிரடி காட்டி வருகிறார்கள்.
முட்டை தட்டுப்பாடு
கூடுதல் வரிகள் மூலம் இறக்குமதியை கடுமையானதாக மாற்றி வைத்துள்ளது, சில பொருட்களை என்ன விலை கொடுத்தாவது இறக்குமதி செய்தாக வேண்டிய நிலையில் உள்ளது. அந்த வரிசையில் முட்டை இருக்கிறது.
முட்டை தட்டுப்பாடு காரணமாக, அயல்நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் அண்மையில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவியது.
இதன் காரணமாக 15 கோடிக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், நோய்வாய்ப்படும் கோழிகளை உடனே அழிக்க வேண்டும் என பண்ணையாளர்களை அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால், அமெரிக்காவில், முட்டைக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.