நீ ஒரு முட்டாள்!.. பேட்டியில் தொகுப்பாளரை திட்டிவிட்டு வெளியேறிய ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், என்.பி.சி. தொகுப்பாளர் கிறிஸ்டன் வெல்கரை நேர்மையற்றவர், முட்டாள் என்று கூறிவிட்டு, தேசிய அளவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் இருந்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கலிபோர்னியாவில் தேர்தல்களில் முறைகேடு நடந்ததாகத் தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் வழங்குமாறு தொகுப்பாளர் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் என்.பி.சி.இன் 'மீட் தி பிரஸ்' நிகழ்ச்சிக்கான நேர்காணலை பாதியில் முடித்துக்கொண்டார்.

2020ம் வருடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ட்ரம்ப் கூறிய குற்றச்சாட்டுக்கு ஆதாரம் வழங்குமாறு தொகுப்பாளர் வற்புறுத்தியதால் கோபமடைந்த டிரம்ப் நேர்காணலை பாதியிலேயே முடித்துக் கொண்டார்
தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், “நீங்கள் ஒன்று நேர்மையற்றவர் அல்லது முட்டாள். இந்த கேவலமான செயலால் நீங்கள் அவர்களின் வலையில் சரியாக சிக்கிக்கொள்கிறீர்கள்.
இந்தத் தேர்தல்களில் முறைகேடு நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். உங்கள் ஊடக நிறுவனத்திற்கும் அது தெரியும். நீங்கள் ஒருதலைப்பட்சமான, நேர்மையற்ற தொலைக்காட்சி நிறுவனம்.
மன்னிக்கவும். போதும் என்பதால் இதோடு நிறுத்திக்கொள்வோம். நன்றி, அன்பே. மகிழ்ச்சியாக இருங்கள்," என்று கூறிய அதிபர், தனது மைக்கை எடுத்துத் தரையில் வீசினார் பத்திரிகையாளர்களைக் கடுமையாக விமர்சிப்பது ட்ரம்புக்கு இது முதல் முறையல்ல.
U.S. President Donald J. Trump got angry and stormed out of an interview last week with NBC News’ Meet the Press, as Kristen Welker pressed him on baseless claims that he and other administration officials have made in the past regarding the integrity of the 2020 Presidential… pic.twitter.com/gXkUE9w1pT
— OSINTdefender (@sentdefender) June 7, 2026