ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்ட ட்ரம்பின் திட்டம்
உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, அவற்றின் மீது கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கைவிடுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு காரணங்களைக் காட்டி, ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் சுயாட்சி பிராந்தியமான கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சி செய்து வருகிறார்.

நாடுகள் எதிர்ப்பு
இதற்கு எட்டு ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கிரீன்லாந்தின் பாதுகாப்புக்காக தங்கள் நாட்டு ராணுவத்தை அங்கு அனுப்பி வைத்தன.
இதனால், கோபமடைந்த டிரம்ப் கிரீன்லாந்து கையகப்படுத்தலுக்கு எதிராக உள்ள எட்டு ஐரோப்பிய நாடுகள் மீது 10 சதவீத வர்த்தக வரி விதிப்பதாகவும், இது வரும், பிப்., 1 முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார்.
மேலும், கிரீன்லாந்து கையகப்படுத்தும் திட்டம் கைகூடவில்லை என்றால், ஐரோப்பிய நாடுகளுக்கான வரி விதிப்பு 25 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் மிரட்டல் விடுத்தார்.
இதனால், அமெரிக்கா - ஐரோப்பா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சை நிறுத்துவதாக அறிவித்தது.