நியூசிலாந்தில் பாரிய நிலச்சரிவு ; மண்ணுக்குள் சிக்கி மாயமான சுற்றுலாப் பயணிகள்
நியூசிலாந்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் என ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர்.
நியூசிலாந்தின் வடக்கு பகுதி மாகாணங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், மாங்கனுய் எரிமலையில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனால், மலையின் அடிவாரத்தில் முகாம் அமைத்து தங்கியிருந்த பெண்கள், குந்தைகள் என ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மண்ணுக்குள் அடியில் சிக்கியுள்ளனர். தங்களைக் காப்பாற்றுமாறு உதவி கேட்டு சில குரல்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இருப்பினும், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருந்ததால், மீட்புக் குழுவினர் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
இது குறித்து பொலிஸார் கூறியதாவது; நிலம் சரிந்து கொண்டிருக்கும் போதே, மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளை தொடங்கி விட்டனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை சரியாக சொல்லிவிட முடியாது. ஆனால், நிறைய பேர் சிக்கியுள்ளனர், என்று அவர் தெரிவித்தார்.