சிக்காகோவில் இராணுவத்தை களமிறக்க ட்ரம்ப் திட்டம்
சிக்காகோ நகரின் பாதுகாப்புக்காக இராணுவத்தை களமிறக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிக்காகோ நகரில் குற்றங்களை குறைக்கவே ட்ரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்காகோ நகரம், குற்றங்களால் குழப்பத்தில் உள்ளது ,அதை சரி செய்வோம்'என ட்ரம்ப் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வொஷிங்டனின் பாதுகாப்பு
இதனால் இராணுவ தலைமையகமான பென்டகன் சிக்காகோவுக்கு இராணுவத்தை அனுப்ப திட்டமிட்டு வருகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன் வொஷிங்டனின் பாதுகாப்பை ட்ரம்ப் தன் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்ததையடுத்து வொஷிங்டனில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக காரணம் கூறி இராணுவத்தினரை குவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதே போல் கடந்த ஜூனில் கலிபோர்னியாவின்,லொஸ் ஏஞ்சலஸ் நகருக்கு 4,000 இராணுவத்தினரையும் 700 கடற்படையினரையும் ட்ரம்ப் அனுப்பியமை குறிப்பிடத்தக்கது.