உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உடல்நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவிய செய்திகள் குறித்து அவர் நேற்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
சிலர் தான் இறந்துவிட்டதாக நம்புகிறார்கள் என்பது தனக்குத் தெரியாது என்றும், ஆனால் தனது உடல்நிலை குறித்து கவலைகள் இருப்பதாகவும் டிரம்ப் கூறினார்.
உடல்நிலை குறித்து கவலைகள்
இந்த ஊகத்தை “போலி செய்தி” என்றும், “வார இறுதியில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருந்ததாகவும் குறிப்பிட்டார். வார இறுதியில் ட்ரம்பின் கையில் அல்லது அவரது வீங்கிய முழங்கால்களில் ஏற்பட்ட காயத்தைக் காட்டும் பல புகைப்படங்கள் பரப்பப்பட்டன.
ட்ரம்பிற்கு நாள்பட்ட நரம்பு குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அடிக்கடி கைகுலுக்கல் மற்றும் அஸ்பிரின் தொடர்ந்து பயன்படுத்துவதால் இந்த காயங்கள் ஏற்பட்டன என்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறினார். அதேவேளை டிரம்ப் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைத் தடுக்க ட்ரம்ப் இந்த மருந்தை எடுத்துக்கொள்கிறார்.