கத்தாரில் ஈரான் - அமெரிக்கா பேச்சு வார்த்தை ; ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
ஈரான் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை கத்தாரில் உள்ள தோஹாவில் இன்று (ஜூன் 30) நடைபெற உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் - அமெரிக்கா இடையே தொடங்கிய போர், பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்பட்டதையடுத்து இடைக்கால ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தம் ஸ்விட்சர்லாந்தில் கையெழுத்தானது.

இதையடுத்து, ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாக திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டு சரக்குக் கப்பல், ஹோர்முஸ் நீரினையைக் கடக்கும் போது, ஈரான் அந்தக் கப்பலை தாக்கியது.
அந்தக் கப்பலானது, ஈரான் கடலோரப் பகுதியில் செல்லாமல் மற்றொரு பதையில் சென்றதால் அதனை தாக்கியதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், “ஈரான் தரப்பில் ஒரு சந்திப்பைக் கோரியுள்ளனர். இந்த சந்திப்பானது கத்தாரில் உள்ள தோஹாவில் நாளை நடைபெறும்” என்று பதிவிட்டுள்ளார்.