ட்ரம்பின் அனைத்து இறக்குமதி வரிகளும் இரத்து ; அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அமல்படுத்திய உலகளாவிய இறக்குமதி வரியை அமெரிக்காவின் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
அமெரிக்க உற்பத்திகளை ஊக்குவிப்பதாகக் கூறி, கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகம் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிவிதிப்புகளை அமுல்படுத்தியது.

வரி இரத்து
ஆகஸ்ட் 2025 இல், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் ட்ரம்பின் பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்தது, ஆனால் அவை அமலில் இருக்க அனுமதிக்கப்பட்டன.
அந்த மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வெள்ளை மாளிகை கோரிக்கை வைத்ததால், விவகாரம் இறுதியில் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது.
அமெரிக்க உச்ச நீதிமன்றம், ட்ரம்ப் தனது அதிகாரங்களை மீறி தேசிய அவசரநிலைக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தைப் பயன்படுத்தியதாகக் கூறியது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 6 பேர் வரி ரத்துக்கு ஆதரவாகவும், 3 பேர் இந்த தீர்ப்புக்கு எதிராகவும் இருந்தனர். ஆனால், பெரும்பான்மை நீதிபதிகளின் ஆதரவு இருந்ததால் வரி ரத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.